டெல்லியில் 24 வயதுள்ள பெண் செய்தி தொகுப்பாளர் தூக்கு போட்டு தற்கொலை!

டெல்லியில் 24 வயதுடைய பெண் செய்தி தொகுப்பாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
டெல்லி மாநகரின் வெல்கம் எனும் பகுதியில் தனது பெற்றோர் மற்றும் இரண்டு சகோதரிகள் உடன் வசித்து வந்தவர் தான் இந்த பெண் செய்தி தொகுப்பாளர். இந்நிலையில் இவர் அண்மையில் பாடகர் கைலாஷ் கெர் என்பவரை பேட்டி எடுத்திருந்தார் மற்றும் கொரோனா நோய்த் தொற்று காலங்களில் எப்படி நேர்மறையாக சிந்திக்க முடியும் என்பது பற்றியும் இவர் பேசியிருந்தார். இந்நிலையில் அவரது அறையின் கதவை திறக்க குடும்பத்தினர் முயன்றபோது அறைக் கதவு மூடப்பட்டிருந்தது.
வெகுநேரமாக திறக்கப்படாமல் இருந்ததால், போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். அப்பொழுது உள்ளே கதவை உடைத்து சென்று போலீசார் பார்த்த பொழுது மின்விசிறியில் செய்தி தொகுப்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் எந்த ஒரு குறிப்பும் கடிதமும் எழுதி வைக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து விசாரித்தபோது அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இன்னும் அவரது தற்கொலைக்கான முழுமையான காரணங்களை கிடைக்கவில்லை, தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.