ஒருவரை கொரோனா வைரஸ் இருமுறை தாக்குமா.? ஆய்வு முடிவுகள் என்னென்ன கூறுகின்றன.?
கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் உடலில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருக்கும் ஆதலால், சில மாதங்களுக்கு அவர்களை கொரோனா தாக்க வாய்ப்பில்லை என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமடைந்து வீடு திரும்பியவரை மீண்டும் கொரோனா தாக்குமா என்கிற சந்தேகம் பொதுமக்கள் மனதில் எழுந்தவண்ணம் இருக்கிறது.
இதற்கு பதிலளிக்கும் ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவில் இருந்து மீண்டவர்களை பெரும்பாலும் கொரோனா மீண்டும் தாக்க வாய்ப்பில்லை எனவும், ஆனால், அதற்குறிய அதிகாரபூர்வ அறிக்கைகள் இன்னும் தெளிவாக வெளிவரவில்லை எனவும் கூறுகின்றனர். வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்தவர் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா பரவியதாக இதுவரையில் எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சிறு ஆய்வில், கொரோனா போல பரவிய வைரஸ் தாக்கி குணமடைந்தவர்கள் மீண்டும் 3 மாதத்திலிருந்து, ஒரு வருடத்திற்குள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும்,
கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் உடலில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருக்கும் ஆதலால், சில மாதங்களுக்கு அவர்களை கொரோனா தாக்க வாய்ப்பில்லை எனவும், கூறுகின்றனர். ஆனால், அந்த ஆண்டிபாடிகள் சில மாதங்கள் மட்டுமே உடலில் இருக்கும். மேலும், அவர்களுக்கு வேறு நோய்கள் தாக்கவும் வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிடுகின்றனர். விரைவில் கொரோனாவை நீண்ட காலம் தடுத்து நிறுத்தும் தடுப்பூசி கிடைக்கும்.’ எனவும் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.