#BREAKING: சிறப்பு ரயில் சேவை தடை ஆகஸ்ட் 15 வரை நீட்டிப்பு – தெற்கு ரயில்வே.!
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ரயில் சேவை முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்த ரயில்களும் கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி அதாவது இன்று வரை ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மீண்டும் ரயில்கள் நிறுத்தப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Special trains in Tamil Nadu stand cancelled till 15th August, 2020
Special https://t.co/bTHNoFh7x2.02243/02244 MGR Chennai Central- New Delhi-Chennai Central Rajdhani Spl will continue to run until further advice @DrmChennai @SalemDRM @DRMTPJ @TVC138 @propgt14 @drmmadurai pic.twitter.com/k77hYwlo5p
— @GMSouthernrailway (@GMSRailway) July 31, 2020
அதன்படி, திருச்சி-செங்கல்பட்டு, மதுரை-விழுப்புரம், கோவை-காட்பாடி, அரக்கோணம்-கோவை, கோவை-மயிலாடுதுறை, திருச்சி-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.