கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்
முதலமைச்சர் பழனிசாமியின் உத்தரவின் பேரில் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,முதலமைச்சர் தலைமையில், கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.கொரோனா நோய் தொற்றுக்கு உரிய மருந்துகள் இல்லாத நிலையில் நோயின் தன்மைக்கேற்ப ஆங்கில முறை சிகிச்சை அளிக்கபப்டுகிறது.மேலும் இந்திய மருத்துவ முறைகளான சித்தா மற்றும் ஆயுர்வேதா உள்ளிட்ட சிகிச்சைகளை அளிப்பதற்கு முதலமைச்சர் ஆரோக்கியம் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.இதனையடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்துகாந்த கசாயம், அகஸ்திய ரசாயணம், கூஷ்மாண்ட ரசாயணம் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.இம்மருந்துகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மருத்துவமனைகள்,அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் செயல்பட்டு வரும் ஆயுர்வேத சிகிச்சை பிரிவுகளில் எவ்வித கட்டணமுமின்றி பெற்றுக்கொள்ளலாம்.குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அருந்த வேண்டும்.ஏற்கனவே தமிழக அரசால் சித்தா மருந்தான கபகர குடிநீரும்,ஓமியோபதி மருந்தான ஆர்செனிக் ஆல்பம் 30 c -ம் எவ்வித கட்டணமும் இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் முதலமைச்சர் அவர்கள் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைகளை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்#Coronavirus #Coronamedicine #Ayurveda #TamilNadu #Sidda #TNGovt #Vijayabaskar #TNCoronaUpdate pic.twitter.com/TN5f54xG7u
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) July 31, 2020