ரோஹித் சர்மாவிற்கு பந்து வீசுவது மிகவும் கடினம்- லாக்கி பெர்குசன்.!

நியூசிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் பௌலர் லாக்கி பெர்குசன் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவை பற்றி கூறியுள்ளார்.
நியூசிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் பௌலர் லாக்கி பெர்குசன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் மிகப்பெரிய ரசிகன் என்றும் மேலும் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு பந்து வீசுவது மிகவும் கடினமான செயல் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் மேலும் கூறிய பௌலர் லாக்கி இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா மிகவும் சிறந்த ஒரு வீரர் அவர் ஒரு அபூர்வமான பேட்ஸ்மேன் என்றும் அவருக்கு நான் பௌலிங் செய்யும் பொழுது மிகவும் கடினத்தை உணர்ந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ரோஹித் சர்மாவை முதலிலேயே அவுட் ஆக்கவில்லை என்றால் பிறகு வீழ்த்துவது அனைவருக்கும் மிகவும் கடினம் என்றும், மேலும் ரோஹித் சர்மா உலக தரத்திலும் ஒரு சிறந்த வீரர், அதைபோல் கேப்டன்ஷியிலும் அவர் ஒரு சிறந்த கேப்டன் அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்களை புரிந்து கொண்டு அணியை வழிநடத்துவார் என்றும் லாக்கி பெர்குசன் கூறியுள்ளார்.