கோவை என்றால் கல்வியிலும் முதன்மை என நிரூபித்துள்ள மாணவ செல்வங்களுக்கு என் பாராட்டுகள்- அமைச்சர் புகழாரம்.!
இன்று காலை 9.30 மணிக்கு +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த பொதுத்தேர்வில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.04 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், 97.49 % மாணவிகள், 94.38 % மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்களை விட 3.11 சதவீத மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவை மாவட்டம் 97.90 % தேர்ச்சி பெற்று முதலிடத்திலும், விருதுநகர் மாவட்டம் 97.51 % தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்திலும், கரூர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில், பிளஸ் 1 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து, கோவை மாவட்டத்திற்கே பெருமை சேர்த்து கோவை என்றால் கல்வியிலும் முதன்மை என்று நிரூபித்துள்ள மாணவ செல்வங்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
மேலும், பிளஸ் 1 தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியருக்கு என் வாழ்த்துகள், அடுத்து வரவிருக்கும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளிலும் இதே போன்று சிறப்பாக செயல்பட வேண்டுமெனவும் மனமார வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
பிளஸ் 1 தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியருக்கு என் வாழ்த்துகள்!
அடுத்து வரவிருக்கும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளிலும் இதே போன்று சிறப்பாக செயல்பட வேண்டுமெனவும் மனமார வாழ்த்துகிறேன்!
— SP Velumani (@SPVelumanicbe) July 31, 2020