புதிய ஜியோஃபை மாடலை அறிமுகப்படுத்தியது ரிலையன்ஸ்..!!
ரிலையன்ஸ் ஜியோவின் ரிலையன்ஸ் ரீடெயில் ஆனது இன்று அதன் புதிய ஜியோஃபை (மாடல் எண் JMR815) கருவியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடலின் சிறப்பம்சமே அதன் முற்றிலும் புதிய வட்ட வடிவ வடிவமைப்பு மற்றும் 3000எம்ஏஎச் பேட்டரித்திறன் ஆகியவைகளாகும். இது முன்னர் வெளியான 2600எம்ஏஎச் மற்றும் 2300எம்ஏஎச் பேட்டரியை விட சிறந்தது மற்றும் இந்த புதிய மாடல் நீண்ட நேரம் நீடிக்கும்.
இந்த புதிய ரிலையன்ஸ் ஜியோஃபை மாடல் ஆனது ஏற்கனவே ரூ.999/-க்கு இ- காமர்ஸ் போர்ட்டில் விற்பனைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த தயாரிப்பு #OnlyonFlipkart என்கிற பிரிவின்கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது, இதன் பொருள் ப்ளிப்கார்ட்டில் மட்டுமே வாங்க கிடைக்கும். புதிய வடிவமைப்பு.! பெரிய பேட்டரி மற்றும் புதிய வடிவமைப்பு தவிர, பழைய மாதிரிகளுக்கும் இதற்கும் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏதுமில்லை.
முன்னதாக வெளியான ஜியோஃபை மாதிரிகள் ஓவல்-வடிவ வடிவமைப்பு மற்றும் ரூ1,999/ என்கிற விலை நிர்ணயம் மற்றும் ஓஎல்இடி டிஸ்பிளே கொண்டிருந்தன. அனைத்துமே பொத்தான்கள் வடிவில்.! இந்த புதிய மாடல் ஆனதில் அனைத்துமே பொத்தான்கள் வடிவில் தான் (பவர், டபுள்யூபிஎஸ், இன்டிகேட்டர்)கொண்டுள்ளது. குறிப்பிட்டுள்ளபடி, இன்டிகேட்டர் பொத்தான்கள் மேல் பக்கத்தில் வைக்கப்படுகின்றன. 31 சாதனங்களை இணைக்க முடிவதற்கான திறன்.!
இந்த புதிய ஜியோஃபை ஹாட்ஸ்பாட்டின் தொழில்நுட்ப அம்சங்களை பொறுத்தமட்டில், முன்னர் வெளியான ஹாட்ஸ்பாட்களில் இருப்பது போன்றே – ஒரு யூஎஸ்பி போர்ட் மற்றும் 31 சாதனங்களை இணைக்க முடிவதற்கான திறன் ஆகியவைகளை கொண்டுள்ளது. 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனமாக திகழும்.! ஜியோ ஒரு எல்டிஇ ஒன்லி நெட்வொர்க் என்பதால் ஜியோஃபை ஒரு 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனமாக திகழும். அதாவது யூஎஸ்பி-யை பயன்படுத்தியும் கூட பயனர்கள் இணையத்தைப் பயன்படுத்தலாம். இந்த புதிய மாடல் ஆனது எப்டிடி பேண்ட் 3, பேண்ட் 5 மற்றும் டிடிடி பேண்ட் 40 நெட்வொர்க் பேண்ட் ஆகிய ஆதரவுடன் வருகிறது.