அதிக போதைக்காக.. சாராயத்தில் கிருமி நாசினியை கலந்து குடித்த 8 பேர் பலி.!

Default Image

ஆந்திராவில் உள்ள பிரகாசம் மாவட்டத்தின் குரிச்செடு என்ற கிராமத்தில் நேற்று மாலை அதிக போதைக்காக சாராயத்தில் கிருமி நாசினியை கலந்து குடித்த 8 பேர் உயிரிழந்தனர்.  நேற்று மாலை 3 பேர் இறந்த நிலையில் இன்று மேலும் 6 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் மூன்று பேர் யாசகம் பெறுபவர்கள் எனவும் ,  5 பேர் குரிச்செடு கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவும் என தெரியவந்துள்ளது.மேலும், 50 -க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பிரிவில் சிகிக்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்கள் மது அருந்திய இடத்தில இருந்து 8 கிருமி நாசினி பாட்டில்கள் கைப்பற்றியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்