இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரானா பாதிப்பு! கடந்த 24 மணி நேரத்தில் 700-க்கும் மேற்பட்டோர் பலி!

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரானா பாதிப்பு.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸை அளிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை உலகளவில், 17,474,691 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 676,759 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,937,771 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ள நிலையில், இந்தியாவில் இதுவரை, 1,639,350 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 35,786 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,059,093 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், 54,966 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 783 பேர் உயிரிழந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025