சூழலியல் அறிக்கையை திரும்ப பெற வேண்டும்.! கொரோனா போராளிக்குகளுக்கு மரியாதை.! 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
திமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மற்ற செயல்திட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் இன்று காணொலி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
திமுக ஆலோசனை கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.கொரோனா போராளிகளுக்கு மரியாதை : முதலாவதாக வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான மறைந்த மு.கருணாநிதி அவர்களின் இரண்டாவது நினைவு நாளையொட்டி அன்றைய நாளில் மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற கொரோனா போராளிகளுக்கு மரியாதை செய்யவேண்டும் எனவும்,
2.இடஒதுக்கீடு வழக்கு வெற்றி : பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இட ஒதுக்கீட்டிற்காக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து, அதில் வெற்றி பெற்றதை திமுக வரலாற்றில் மிக முக்கிய அத்தியாயம் என்றும்,
3.சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை திரும்பப் பெற வேண்டும் : சேலம் எட்டு வழி சாலை, காவிரியின் குறுக்கே அணை என சுற்றுச்சூழலையும் விவசாய பெருமக்களின் வாழ்க்கையில் சீரழிக்கும் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள மாநில உரிமைகளை விரோதமான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைய திரும்பப் பெற வேண்டும் எனவும்,
4.புதிய கல்வி கொள்கையை ஏற்கமாட்டோம் : மும்மொழி கல்வி திட்டம், மழலை கல்வியை கூட மத்திய அரசு முடிவு செய்யும் என மாநிலங்களிடம் எஞ்சியிருக்கும் கல்வி உரிமையை கூட மத்திய அரசு தலையிடும் புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்கமாட்டோம். இதனை அதிமுக அரசும் தீர்மானமாக அறிவிக்க வேண்டும் எனவும் இந்த காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.