வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி! பிரேசில் அரசு அதிரடி!
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி பிரேசில் அரசு.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் உள்ளது. பிரேசிலில் இதுவரை கொரோனா பாதிப்பால், 2,555,518 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 90,188 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், விமான போக்குவரத்து தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத்துறையை மீட்டெடுக்கும் வகையில், விமானத்தில் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பிரேசில் அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு அரசாணை அரசிதழில், தரைமார்க்கம் அல்லது கடல் வழியாக வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான தடைகள் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் விமானம் மூலம் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.