300 கோடி உயிரினங்களை கொன்ற ஆஸ்திரேலிய காட்டு தீ! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Default Image

300 கோடி உயிரினங்களை கொன்ற ஆஸ்திரேலிய காட்டு தீ.

கடந்த 2019ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு தொடக்கத்தில், ஆஸ்திரேலியாவில் பயங்கரமான காட்டு தீ ஏற்பட்டது. இதனால் சுமார் 1,15,000 சதுர கிலோமீட்டர் காட்டுப்பகுதி பாதிக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் 30க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்த நிலையில்,  ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து வாடினர். ஆஸ்திரேலிய வரலாற்றில் இதுதான் மிக நீண்ட காட்டுத் தீயாக இருந்தது.

இந்நிலையில், இந்த காட்டு தீயில் ஏராளமான உயிரினங்கள் உயிரிழந்துள்ளன. ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகள் வெளியிட்டுள்ள தகவலில், ஆஸ்திரேலிய காட்டுத்தீயால் சுமார் 3 பில்லியன் ( 300 கோடி) விலங்குகள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 143 மில்லியன் பாலூட்டிகள், 2.46 பில்லியன் ஊர்வன, 180 மில்லியன் பறவைகள், 51 மில்லியன் தவளைகளும் அடங்கும். இந்த கணக்கெடுப்பு முடிவுகள் இன்னும் முடிவடையவில்லை என கூறுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்