மறு உத்தரவு வரும்வரை இவைகளுக்கு தடை தொடரும்.. அரசு அதிரடி உத்தரவு.!

இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன், முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை முடிந்த நிலையில், தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை இருந்த ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பல்வேறு கட்டுப்பாடுகளும், தளர்வுகளுடனும் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மறு உத்தரவு வரும்வரை இவைகளுக்கு தடை தொடரும் என கூறப்பட்டுள்ளது.
- மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுதலங்களிலும் மற்றும் தமிழ்நாட்டில் அனைத்து பகுதியிலும் உள்ள மிகப்பெரிய வழிபாட்டு தலங்ககளிலும் பொதுமக்கள் வழிபாடு கிடையாது.
- அனைத்தும் மதம் சார்ந்த கூட்டங்கள்.
- நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை தொடரும்.
- தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடரும். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்களை தனிமைப்படுத்துவதற்கு மட்டும் விலக்குஅளிக்கப்படுகிறது.
- வணிக வளாகங்கள் (Shopping Malls)
- பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள் திறக்க அனுமதி இல்லை. எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதோடு அதனை ஊக்குவிக்கலாம்.
- மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
- மெட்ரோ ரயில் / மின்சார ரயில் தடை நீடிக்கும்.
- திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள் கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (Bar), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அனுமதி இல்லை.
- அனைத்து வகையான சமுதாய, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை.
- மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025
தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!
February 28, 2025