அதிகரிக்கும் கொரோனா..? தேர்வு நடத்தும் கர்நாடகா.

கர்நாடக மாநிலத்தில் இன்று மற்றும் நாளை Karnataka Common Entrance Test exam நடத்த தடை விதிக்க கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தேசிய மாணவர் சங்கத்தில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கர்நாடக மாநிலத்தில் 54 இடங்களில் 497 தேர்வு மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் 1,94,356 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். கர்நாடகாவிற்கு வெளியில் இருந்து 1881 மாணவர்களும் தேர்வு எழுத வருகிறார்கள். அவர்களில் 1300 பேர் பெங்களூருக்கு வருகிறார்கள் எனவும், கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்களையும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.
அதற்கு , அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்பாகவே 40 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது அடையாளம் காணப்பட்டதாகவும், அவர்களுக்கு தனி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
மேலும், மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் மாநிலசுகாதாரத்துறை நிபந்தனைகளை அனைவரையும் பின்பற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்வார்கள் என கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், இன்று மற்றும் நாளை நடைபெறவிருந்த Karnataka Common Entrance Test exam (கே.சி.இ.டி) நடத்த தடை செய்ய முடியாது என கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவை பிறப்பித்தது.
இதுவரை கர்நாடக மாநிலத்தில் 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,055 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பித்ததக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025