#BREAKING: நாடு முழுவதும் 3-வது கட்ட தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு.!

Default Image

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25- ஆம் தேதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மே 31 -ஆம் தேதி வரை கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பின்னர், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வருகின்ற 31- ஆம் தேதி உடன் ஊரடங்கு முடிவடைய உள்ளதால், ஆகஸ்ட் 1 முதல் மேலும் சில தளர்வுகள் மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்த்த நிலையில் 3-வது கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

  • அதன்படி, நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்ட்31 வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம்.
  • நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5 முதல் திறக்க அனுமதி.
  •  பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை இயங்காது.
  • சுதந்திர தினக் கொண்டாட்டம் தனிமனித இடைவெளியுடன் நடைபெற வேண்டும் என அறிவித்துள்ளது.
  • மதுபானக் கூடங்கள், மெட்ரோ ரயிலுக்கு தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவைகளுக்கும் தடை நீட்டிப்பு
  • உள்நாட்டில் குறைந்த அளவில் மட்டுமே விமானங்களை இயக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
  •  சர்வதேச விமான சேவைக்கு தடை நீட்டிப்பு
  • வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்துவரும் பணி தொடரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்