என்ன டா இது தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை !
தமிழ் சினிமா தற்போது சோதனை காலத்தை கடந்து வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக எந்த புதுப்படங்களும் வெளிவரவில்லை, அதுமட்டுமில்லாமல் திரைப்பட படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபல மூத்த இயக்குனர் எஸ்.பி முத்துராமன் தற்போதைய தமிழ் சினிமாவின் நிலைமையை பற்றி கூறுகையில், தமிழ் திரைப்படத்துறை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. கிட்டத்தட்ட அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, உயிருக்கு போராடும் நிலையில் தான் உள்ளது. இன்னும் கொஞ்சம் விட்டால் மொத்த உயிரும் போய்விடும் போல.
அதனால் இத்துறையை காப்பாற்ற மத்திய, மாநில அரசுக்கள் கொஞ்சம் கவனித்து கூடுதல் சிரத்தை எடுக்க வேண்டும். இத்துறையில் உள்ள எல்லாரும் ஒற்றுமையாக செயல் படவேண்டும் என்று கூறினார்.