முதுமையை போக்கி இளமையை புதுப்பிக்கும் பப்பாளி
முதுமையை போக்கி இளமையை புதுப்பிக்கும் பப்பாளி.
இன்றைய தலைமுறையினர் தங்களது சரும அழகை மேம்படுத்துவதில், தனி கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக தங்களது பணத்தை அதிக அளவில் செலவு செய்து, பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடிய பல கிரீம்களை வாங்கி உபயோகிக்கின்றனர்.
தற்போது இந்த பதிவில், முதுமையை போக்கி இளமையை புதுப்பிக்கும் பப்பாளி குணாதிசயங்கள் பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- பப்பாளி
- அன்னாசி
- தர்பூசணி
செய்முறை
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் பப்பாளி, அன்னாசி மற்றும் தர்பூசணி மூன்றையும் ஒன்றாக மிக்சியில் போட்டு அரைக்க வேண்டும்.
அதன்பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின் இறுதியில் நீரால் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், முகம் பளபளப்பாகவும், இளமையாகவும் காணப்படும்.