12ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி – மத்திய அரசு
12ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், 12ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி அமலில் இருக்கும்.மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் உருவாக்கப்படும். 5+3+3+4 என்ற முறையில் பள்ளி வகுப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன .ஆறாம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.