தளபதியின் தெறி-2யை பார்க்க விரும்பும் பிக்பாஸ் பிரபலம்.!

Default Image

பிக்பாஸ் பிரபலமான தர்ஷன் மீண்டும் தெறி-2ல் விஜய்யை யாரெல்லாம் பார்க்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் தெறி. ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்த இந்த படத்தில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படம் 150கோடி வரை வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

இந்த படத்தை சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியதை அடுத்து, பலர் அதனை குறித்த நினைவுகளை ஷேர் செய்து வந்தனர். அந்த வகையில் பிக்பாஸ் பிரபலமான தர்ஷன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெறி-2ல் டிசிபி விஜயகுமாரை மீண்டும் யாரெல்லாம் பார்க்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ட்வீட்க்கு பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

&nbsp

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்