தண்ணீர் பழத்தில் உள்ள நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் அறிவோம் வாருங்கள்!
தண்ணீர் பழத்தில் எக்கச்சக்கமானா நன்மைகள் இருப்பதுடன், பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அவைகளை பற்றி நாம் இன்று பார்ப்போம்.
தண்ணீர் பழத்தின் நன்மைகள் & மருத்துவ குணங்கள்
கண் அழுத்த நோய், மாலைக்கண் நோய் உள்ளவர்கள் தர்பூசணி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் அனைத்தும் குணமாகும். கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பகாலத்தில் தர்பூசணி ஜூஸ் குடித்து வந்தால் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். முடி கொட்டுவது தொடர்பான பிரச்சினை உள்ளவர்களுக்கு தர்பூசணி பழம் சிறந்த தீர்வாக அமையும்.
நார்ச்சத்துக்கள் மற்றும் அதிக தண்ணீர் உள்ளதால் இது மலச்சிக்கலைப் போக்கி விரைவில் குணமளிக்கும். கட்டி, வீக்கம் போன்ற வியாதி உள்ளவர்கள் தர்பூசணி பழத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது, அதிலுள்ள கரோட்டினாய்டுகள், பிளவனாய்டுகள் போன்ற நிறமிகள் அவற்றை போக்கும் தன்மை கொண்டது. பெருங்குடல் நுரையீரல் போன்ற இடங்களில் காணப்படும் புற்று நோயை தடுக்கவும் இந்த பழம் உதவுகிறது.