இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த ரஃபேல் போர் விமானங்கள்.. ரேடியோ சிக்னல் மூலம் வரவேற்பு!
பிரான்சில் இருந்து புறப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள், இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தது.
ஹரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் 5 ரபேல் விமானங்கள் இன்று பிற்பகல் வரவுள்ளது. இதன்காரணமாக, விமானப்படை தளத்தை சுற்றியுள்ள நான்கு கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமானம் தரையிறங்கும்போது வீடுகளின் மாடியில் இருந்து புகைப்படம் எடுக்கவும், அந்தப் பகுதியில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது, உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரான்சில் இருந்து 7,000 கி.மீ தூரம் பயணித்து, இன்று மதியம் 2 மணிக்கு ஹரியானாவில் உள்ள விமானப்படை தளத்தில் ரஃபேல் போர் விமானங்கள் வரவுள்ள நிலையில், தற்பொழுது அந்த 5 விமானங்களும் இந்திய வான் எல்லையில் நுழைந்தது. மேலும் அந்த விமானங்களுக்கு ரேடியோ சிக்னல் மூலம் வரவேற்பளிக்கப்பட்டது.