ஹெல்மெட் அணியாத இளைஞன்..பைக் சாவியை கொண்டு நெற்றியில் குத்திய போலீஸ்.!
புதுடில்லியின் உத்தரகண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மாவட்டத்தில் ஒரு இளைஞன் பைக் சாவியை கொண்டு நெற்றியில் போலீசாரால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ருத்ராபூர் பகுதியில் திங்கள்கிழமை மாலை அந்த நபர் தனது நண்பருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவரை ஹெல்மெட் அணியாததால் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதற்கிடையில் ஒரு வாக்குவாதம் வந்ததை அடுத்து ஒரு போலீஸார் பாதிக்கப்பட்டவரின் பைக்கின் சாவியை வெளியே எடுத்து அந்த நபரின் நெற்றியில் குத்தியுள்ளார். சம்பவம் நடந்தபோது வாகன சோதனைக்காக மூன்று போலீசாரும் சம்பவ இடத்தில் இருந்தனர் என்று கூறப்டுகிறது .
இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. வீடியோவில், அந்த மனிதனின் நெற்றியில் ஒரு சாவி மற்றும் இரத்தம் வெளியேறுவதைக் காணலாம். மேலும் இச்சம்பவம் குறித்து அவர் அருகிலிருந்த மக்கள் அவரிடம் கேட்டதால் ஒரு வார்த்தையும் சொல்ல முடியவில்லை. அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த உத்தரகண்ட் காவல்துறையின் நகர ரோந்துப் பிரிவுடன் இணைந்த மூன்று குற்றம் சாட்டப்பட்ட போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த சம்பவதிற்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஒரு போலீஸ் காயமடைந்தார். பின்னர் எம்.எல்.ஏ ராஜ்குமார் துக்ரால் அந்த இடத்தை அடைந்து மக்களை சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.