கொரோனா வைரசுக்கு எதிரான உலகளாவிய கொரோனா போராட்டம்! இந்தியா- இங்கிலாந்து கூட்டு கோவிட் -19 தடுப்பூசி திட்டம்!
இந்தியா- இங்கிலாந்து கூட்டு கோவிட் -19 தடுப்பூசி திட்டம்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதுவரை உலக அளவில், இந்த வைரஸ் பாதிப்பால் 16,893,530 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 663,476 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இந்த வைரஸை அளிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளது.
நுண்ணுயிர் எதிர்ப்பு எதிர்ப்பைச் சமாளிக்கவும், ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பாக்டீரியா மற்றும் மரபணுக்களுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்தவும் இந்தியாவும் இங்கிலாந்தும் 8 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இங்கிலாந்து ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு நிதியிலிருந்து 4 மில்லியன் வழங்குகிறது.
ஏற்கனவே இங்கிலாந்து, கோவிட் -19 க்கான தடுப்பூசியை தயாரிக்க, இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ள நிலையில், மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக இருந்தால், வளரும் நாடுகளில் ஒரு பில்லியன் மக்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டுக்குள் 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள கூட்டு ஆராய்ச்சியுடன், இந்தியாவின் இரண்டாவது பெரிய ஆராய்ச்சி பங்காளியாக இங்கிலாந்து உள்ளது என இந்தியாவின் உயர் ஸ்தானிகர் பிலிப் பார்டன் தெரிவித்துள்ளார்.