17 பேர் குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை அதிகாரி இன்று நேரில் ஆய்வு!
அதுல்ய மிஸ்ரா தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ விபத்து தொடர்பாக நாளை விசாரணையைத் தொடங்க உள்ளார்.
குரங்கணி பகுதியில் காட்டுத் தீயில் சிக்கியவர்களில் 17 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள வருவாய் மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மை முதன்மை செயலர் அதுல்ய மிஸ்ரா இன்று போடி செல்கிறார். விபத்துக்கான சூழ்நிலை, டிரக்கிங் ஏற்பாட்டாளர்களின் பங்கு மற்றும் தவறுகள், டிரெக்கிங்குக்கு அனுமதி தொடர்பான வனத்துறை விதிகள் உள்ளிட்டவை குறித்து நாளை முதல் அவர் விசாரணை நடத்தவுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.