தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸ் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரையுமே பாதிக்கிறது.
இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் உள்ள பாதுகாப்பு வீரர்கள், தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.