டொனால்ட் டிரம்ப் மகனின் ட்விட்டர் கணக்கு 12 மணிநேரத்திற்கு அதிரடியாக முடக்கம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகனான டிரம்ப் ஜூனியரின் ட்விட்டர் கணக்கு 12 மணிநேரத்திற்கு அதிரடியாக முடக்கியது ட்விட்டர் நிர்வாகம் .
டொனால்ட் டிரம்பின் மூத்த மகனான டிரம்ப் ஜூனியர் கொரோனா வைரஸ் குறித்த வீடியோ பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் .அதில் அவர் கூறியிருப்பது அதிபர் டிரம்ப் உட்பட சிலர், மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக இருக்கும் என பரிந்துரைத்தனர் அதை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை .மேலும் முகக்கவசங்கள் தேவையில்லை என்று சர்ச்சைக்குரிய வீடியோவை பதிவிட்டிருந்தார் .
இதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ ட்வீட் செய்திருந்தார்.அவரை 84 மில்லியனுக்கு அதிகமானோர் பின்தொடர்கின்றனர் .
இது குறித்து விளக்கமளித்துள்ள ட்விட்டர் நிர்வாகம் , இந்த ட்வீட் COVID-19 குறித்த தவறான தகவல் கொள்கையை மீறியுள்ளது.எங்கள் விதிமுறைகளை மீறியுள்ளதால் அடுத்த 12 நேரத்திற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது .அவர் ட்விட்டரை பயன்படுத்தலாம் யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் பதிவிட முடியாது என்று தெரிவித்துள்ளது .