அதிகரிக்கும் வலிமை.. இன்று 5 ரபேல் போர் விமானங்கள் வருகை..!
கடந்த 2016-ம் ஆண்டு பிரான்சில் இருந்து இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுனது.
இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள், மற்ற விமானங்களில் இருப்பது போன்ற அனைத்து அம்சங்களும் பயிற்சி விமானங்களிலும் உள்ளது. அனைத்து ரபேல் விமானங்களும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.
முதல் 10 விமானங்களின் தயாரிப்பு பணி முடிவடைந்ததால் கடந்த அக்டோபர் மாதம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்று விமானங்களுக்கு பூஜையும் செய்தார். 10 விமானங்களில் 5 விமானங்கள் பயிற்சிக்காக பிரான்சிலேயே உள்ள நிலையில், மீதமுள்ள 5 விமானங்கள் நேற்று பிரான்சில் இருந்து இந்தியாவை நோக்கி நேற்று முன்தினம் தனது பயணத்தை தொடங்கியது.
இந்தியா-பிரான்ஸ் இடையே 7 ஆயிரம் கி.மீ. தூரம் என்பதால் ரபேல் போர் விமானங்கள் நடுவானில் எரிபொருள்கள் நிரப்பிக் கொள்ளவதாகவும், இடையில் அமீரகத்தில் உள்ள பிரான்ஸ் நாட்டு விமானப்படை தளத்தில் தரையிறங்க உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த 5 விமானங்களும்ஹரியானாவிம் அம்பாலா விமானப்படை தளத்தில் இணைக்கப்படுகின்றன. இந்த விமானங்கள் லடாக் எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பணியில் நிறுத்தப்படும் என கூறப்படுகிறது. இது இந்திய விமானப்படையின் வலிமை மற்றும் திறன்களை மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.