குணமடைந்த சில நாட்களிலே பொது இடத்தில் முகக்கவசத்தை கழட்டிய பிரேசில் அதிபர்
பிரேசில் அதிபர் போல்சனோராவிற்கு கடந்த ஜூலை 7 -ஆம் தேதி கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இரு வாரங்களுக்குப் பிறகு கடந்த சனிக்கிழமை மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தபோது போல்சனோராவிற்கு நெகட்டிவ் என வந்தது.
இந்நிலையில், தற்போது பொது பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தலைநகர் பிரேசிலியாவில் நேற்று முன்தினம் நடந்த ஆதரவாளர்கள் கூட்டத்தில் தனது மாஸ்கை கழட்டியது பெரும் சர்ச்சை ஆனது.
பிரேசிலில் கொரோனாவால் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.