இமாச்சல பிரதேச முதலமைச்சருக்கு மீண்டும் நெகட்டிவ்..!

இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் உதவியாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இமாச்சல முதல்வரும், அவரது குடும்ப உறுப்பினர்களும் தனிமைப் படுத்தப்பட்டனர்.இவர்களுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அப்போது, நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது.
இந்நிலையில், மீண்டும் முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவர்களுக்கு நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.