இதுவரை இல்லாத உச்சம்..கேரளாவில் மேலும் 1,167 பேருக்கு கொரோனா.!

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக 1167 பேருக்கு கொரோனா இதனால்மொத்த எண்ணிக்கை 2068 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர். இதுவரை 67 பேர் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. இது வரை 10,091 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இன்று மட்டும் 679 பேர் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10,733 ஆக உயர்ந்துள்ளது
இன்று பாதித்தவர்கள் 122 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும், 96 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 890 பேருக்கு நோயாளிகளின் தொடர்பு மூலம் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.