விஎச்பி யாத்திரைக்கு எதிர்ப்பு  நெல்லையில் 800 பேர் கைது  செங்கோட்டையில் நடைபெற்ற மறியல்,தமிழக எல்லையில் கலவர ரதம்,திருமாவளவனுடன் சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு…!!

Default Image

 

நெல்லை மாவட்டம் செங்கோட் டையில் ராமராஜ்ய ரத யாத்திரை என்கிற பெயரில் வகுப்புவாத அடிப்படையில் பதற்றத்தை ஏற்படுத்தும் விஸ்வ ஹிந்து பரிஷத்திற்கு எதிர்ப்புதெரிவித்து, பல்வேறு காட்சிகள், பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. இதில் நெல்லை மாவட்டம் முழுவதும் 800 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் மதநல்லிணக்கத்துக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதற்காக அவர்கள் ராமராஜ்ஜிய ரத யாத்திரை என்கிற பெயரில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த ரத யாத்திரை கடந்தமாதம் (பிப்ரவரி) 13 ஆம் தேதி அயோத்தியில் தொடங்கியது. மத்தியப்பிரதேசம், மகராஷ்டிரா, கர்நாடகா வழியாக கேரளா வந்தது.பின்னர் அங்கிருந்து நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரை வழியாக தமிழகத்திற்கு வந்தது. பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த ரத யாத்திரைக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரத யாத்திரையை தமிழகத்திற்குள் வரவிடாமல், புளியரையில் மறிக்கப்போவதாக சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் அறிவித்தன. இதனால், செங்கோட்டை, புளியரை மட்டுமின்றி நெல்லை மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. யாத்திரைக்கு எதிரான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் விதமாக நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு வருகிற 23 ஆம் தேதி மாலைவரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ரத யாத்திரை தமிழகத்திற்கு வரக்கூடிய நுழைவு பகுதிமற்றும் செல்லக்கூடிய வழிகளில்பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. செங்கோட்டை மற்றும் புளியரை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். ரத யாத்திரையை தடுத்து நிறுத்துவோம் என்று கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் இராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, எஸ்.டி.பி.ஐ. தலைவர் தெகலான் பாகவி ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், தமிழக வாழ்வுரிமைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், முஸ்லீம் லீக், தமுமுக, மமக,தவ்ஹித் ஜமாத், எஸ்.டி.பி.ஐ, தமிழ்தேசிய முன்னணி, ஆதி தமிழர்பேரவை, தமிழ்புலிகள் உட்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்டவர்கள் செங்கோட்டையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். முன்னெச் சரிக்கை நடவடிக்கை என கூறிமாவட்டம் முழுவதும் 200க்கும்மேற்பட்டோர் கைது செய்யப்பட் டுள்ளனர்.

திருமாவளவனுடன் சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு

விஸ்வ இந்து பரிஷத் அமைப் பின் ரத யாத்திரையை எதிர்த்துப் போராட்டம் நடத்த காரில் செங்கோட்டை சென்றபோது, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை மதுரை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாவட்ட எல்லையான ஏ.பாறைப்பட்டியில் வைத்து செவ்வாய் காலை 7.45 மணிக்கு தொல்.திருமாவளவன் உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஏ.பாறைப்பட்டியிலிருந்து 60 கி.மீ,. தொலைவில் உள்ளவாடிப்பட்டிக்கு காலை 9.15 மணிக்குக் கொண்டு வரப்பட்டு அங்குள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைக்கப்பட்டனர்

.திருமாவளவன் கைது செய்யப் பட்டதைக் கண்டித்து விசிகவினர் வாடிப்பட்டியில் மறியலில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட தொல்.திருமாவளவன் உள்ளிட்ட நிர்வாகிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மதுரைபுறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே .பொன்னுத் தாய், மாவட்டக்குழு உறுப்பினர் வி.உமாமகேஸ்வரன் ஆகியோர் நேரில்சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்