#Breaking : நாளை மறுநாள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நாளை மறுநாள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா கால பணிகள், சட்டமன்ற தேர்தல் முன் தயாரிப்புகள், கட்சிப்பணிகள் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க திமுக மாவட்டச்செயலாளர்கள், நாடாளுமன்ற & சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகின்ற 30-ஆம் தேதி காணொளி காட்சி மூலமாக நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.நேற்று தோழமைக் கட்சிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை மறுநாள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு#DMK #MKStalin pic.twitter.com/7ANf8EsDbS
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) July 28, 2020