குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார்!

Default Image

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இசைஞானி இளையராஜா, தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி, யோகா பயிற்சியாளர் நானாம்மாள் உள்ளிட்டோருக்கு  பத்ம விருதுகளை வழங்கி கெளரவித்தார்.

தலைநகர் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில், பத்ம விருதுகள் வழங்கும் விழா,  நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். இசைஞானி இளையராஜாவுக்கு, குடியரசு தலைவர் பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவித்தார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த உஸ்தாத் இசைக்கலைஞர் உஸ்தாத் குலாம் முஸ்தஃபாகானுக்கும், கேரளாவின் பிரபல இலக்கியவாதியும், கல்வியாளருமான பரமேஸ்வரனுக்கும், பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் முதல் தொல்லியல் துறை இயக்குநரும், கல்வெட்டு எழுத்துக் குறிப்பு அறிஞருமான ராமச்சந்திரன் நாகசாமிக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 98 வயதான மிக மூத்த யோகா பயிற்சியாளரான நானாம்மாளுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவம் சேர்த்தார்.

பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க வழிகாட்டிய, மதுரை தியாகராய கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ராஜகோபாலன் வாசுதேவனுக்கு குடியரசு தலைவர் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் விளையாட்டு வீரர் சோம்தேவ் தேவ் வர்மன், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பேட்மிண்டன் விளையாட்டு வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்