தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு விலை நிர்ணயம்.!
ஹைதராபாத் தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை மற்றும் பரிசோதனையின் விலை நிர்ணயிக்கப்பட்டள்ளது.
தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை மற்றும் பரிசோதனையின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் சுகாதார காப்பீட்டைக் கொண்ட நோயாளிகளுக்கு பொருந்தாது என்று தெலுங்கானா அரசு நேற்று மீண்டும் வலியுறுத்தியது.
ஜூன்-15 அன்று வெளியிடப்பட்ட GO 248 இன் தற்போது திருத்தப்பட்ட அறிக்கையில் காப்பீட்டுத் தொகையை செலுத்தும் முறைக்கு விலை பொருந்தாது என்று தெரிவிக்கபட்டுள்ளது .
காப்பீட்டுத் திட்டங்களுக்கு சந்தா செலுத்தும் நோயாளிகளுக்கும், மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு நிதியுதவி கார்ப்பரேட் நிறுவனங்களுடன் நுழைந்த பல்வேறு ஒப்பந்தங்களின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் இந்த முறை பொருந்தாது என்று தெவித்துள்ளது. இந்நிலையில் GO 248 ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 9,000 ரூபாயை நிர்ணயித்துள்ளது.