எச்சரிக்கை.! அளவுக்கு மீறிய சானிடைசர்களும் ஆபத்துக்களை தரும்.!
அதிக அளவில் சானிடைஸர்களை கொண்டு கைகழுவி வந்தால், அது உடலில் உள்ள நல்ல பேக்டிரியாக்களையும் அழித்துவிடும்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க உலக சுகாதார நிபுணர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கூறிவருகின்றனர்.
அதில், முக்கியமானவை, முகக்கவசம் அணிவது, கைகழுவுவதும், சமூக இடைவெளி ஆகியவை ஆகும். இதில் முகக்கவசமும், தனிமனித இடைவெளியும் பாதிப்புகளை ஏற்படுத்த போவதில்லை. ஆனால், ஆல்கஹால் கலந்திருக்கும் அதிக அளவில் சானிடைஸர்களை கொண்டு கைகழுவி வந்தால், அது உடலில் உள்ள நல்ல பேக்டிரியாக்களையும் அழிக்கும் வல்லமை கொண்டது.
ஆல்கஹால் கலந்த சானிடைசர்கள் கெட்ட பேக்டீரியாக்களை அழித்துவிடும் என்பது உண்மை. ஆனால், அதனை அதிகமாக உபயோகிக்கும் போது, தோல்பகுதியில் கடுமையான வறட்சி, சருமம் சிவத்தல், தோல் அலர்ஜி போன்ற தோல் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும், தற்போதைய கொரோனா காலத்தில் ஆல்கஹால் கலந்த சானிடைசர்கள் உபோயோகிப்பது கட்டாயம் எனவும் சுகாதாரத்துறை வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.