ஒபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு.. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பாஜக வரவேற்பு!

மருத்துவப் படிப்பில் ஒபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு குறித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக பாஜக வரவேற்பதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, திமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது இந்திய மருத்துவ கவுன்சிளின் வாதத்தை ஏற்க முடியாது எனவும், மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தர சட்டம் இயற்றலாமென தெரிவித்தது. மேலும் மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஒபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரிதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் இல்லை என தெரிவித்தது. இது தொடர்பாக 3 மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் எனவும், இட ஒதுக்கீடு வழங்க சட்டரீதியாக தடை இல்லை என தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்நிலையில், மருத்துவப் படிப்பில் ஒபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு குறித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளதாக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். மேலும், பிறப்படுத்தப்பட்ட சமுயாதத்தின் உயர்வுக்காக பாடுபடும் கட்சி பாஜக என அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!
November 22, 2024
மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!
November 22, 2024
நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?
November 22, 2024
அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!
November 22, 2024