ஏழை குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி அளித்து ரியல் ஹீரோவான சோனு சூட்.!
ஏழை விவசாய குடும்பத்திற்கு டிராக்டர் கொடுத்து உதவியதோடு, படிப்பு செலவுகளையும் சோனு சூட் ஏற்று ரியல் ஹீரோவாக உள்ளார்.
நடிகர் சோனு சூட் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல உதவிகளை செய்து ரியல் ஹீரோவாக வலம் வருகிறார். தினசரி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியதோடு, ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து உதவினார். இந்த நிலையில் தற்போது ஒரு ஏழை விவசாயி குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுது விவசாயம் செய்ய முடிவு செய்த அவருக்கு காளை வாங்க பணமில்லாமல் அவதிப்பட, வேறு வழியின்றி தனது இரண்டு மகள்களின் உதவியுடன் ஏர் உழுதுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், அதனை கண்ட சோனு சூட் அந்த விவசாயின் தகவலை பகிர்ந்தால் அவருக்கு இரண்டு காளை மாடுகள் வாங்கி தருவதாக கூறியிருந்தார். அதனையடுத்து நெட்டிசன்கள் விவசாயியை குறித்த தகவல்களை கண்டுபிடித்து சோனு சூட்டுக்கு பகிர்ந்துள்ளனர்.
இரண்டு காளை மாடுகள் வாங்கி தருவதாக சோனு சூட், நேற்றிரவு விவசாயின் வீட்டின் முன்பு புத்தம் புதிய டிராக்டர் வந்து நின்றது. இதனை பார்த்த அந்த ஏழை குடும்பம் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சோனு சூட் அந்த அவரது இரண்டு மகள்களின் கல்வி செலவையும் ஏற்றுள்ளார். பெரும் உதவியை செய்த சோனு சூட்டிற்கு விவசாயி குடும்பம் நன்றியை தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் சோனு சூட்டின் இந்த உதவிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
Spoke with @SonuSood ji & applauded him for his inspiring effort to send a tractor to Nageswara Rao’s family in Chittoor District. Moved by the plight of the family, I have decided to take care of the education of the two daughters and help them pursue their dreams pic.twitter.com/g2z7Ot9dl3
— N Chandrababu Naidu #StayHomeSaveLives (@ncbn) July 26, 2020