covid 19 சோதனை : இஸ்ரேலிய தூதுக்குழு கோவிட்-19 சோதனையில் கலந்து கொள்ள இந்தியா புறப்படுகிறது!

Default Image

இஸ்ரேலிய தூதுக்குழு கோவிட்-19 சோதனையில் கலந்து கொள்ள இந்தியா புறப்படுகிறது.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 1,436,019 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 32,812 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அகில இந்திய மருத்துவ நிறுவனத்துடன் நான்கு கொரோனா வைரஸ் நோயறிதல் தீர்வுகளை சோதிக்க இந்தியாவுக்கு இஸ்ரேலின் வெளியுறவு மற்றும் சுகாதார அமைச்சகங்களின் குழு இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘எம்.எஃப்.ஏ மற்றும் சுகாதார அமைச்சகத்துடனான எங்கள் தூதுக்குழு இஸ்ரேலில் இருந்து புறப்பட்டு இந்தியாவுக்குச் செல்கிறது! அங்கு சென்றதும், தூதுக்குழு எங்கள் இந்திய பங்காளிகள் மற்றும் சகாக்களுடன் சேர்ந்து நான்கு நம்பிக்கைக்குரிய கொரோனா நோயறிதல் தீர்வுகளை சோதிக்கும்.’ என பதிவிட்டிருந்தனர்.

இஸ்ரேலிய அணி, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் என்றும், முதல் கட்டத்தின் சோதனை ஏற்கனவே இஸ்ரேலில் செய்யப்பட்டது. கடைசி கட்டம் இப்போது இந்தியாவில் சோதனைக் கருவிகளுக்காக மேற்கொள்ளப்படும், இது ஒரு நிமிடத்திற்குள் முடிவுகளைத் தரும் என்றும் தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்