டிக்டாக்கை தொடர்ந்து, இந்தியாவில் பப்ஜி உட்பட 275 சீன செயலிகளுக்கு தடை?

Default Image

இந்திய அரசின் விதிமுறைகளை மீறுவதாக பப்ஜி உட்பட 275 செயலிகளுக்கு தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

லடாக் எல்லையில் இந்தியா-சீன ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி, சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது.

இதன்காரணமாக, டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், இந்திய அரசாங்கம் விடுத்த விதிமுறைகளை மீறுவதாக, 275 சீன செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்த ஆலோசனையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, உலகளவில் உள்ள பல இளைஞர்கள் அதிக அளவில் விளையாடும் பப்ஜி கேம், அலி எக்ஸ்பிரஸ், யு லைக், ஜியோமி நிறுவனத்தின் ஸில்லி போன்ற 275 செயலிகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், மத்திய அரசின் அந்த அறிவிப்பில் சியோமியின் 14 செயலிகள் உள்ளது. மற்றபடி, Meitu, LBE Tech, Perfect Corp, Sina Corp, Netease Games, Yoozoo Global ஆகிய நிறுவனங்களின் செயலிகள் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்