போராட்டத்தின் போது ஏற்படுத்தப்பட்ட லேசர் தாக்குதலில் 3 அமெரிக்க அதிகாரிகளின் பார்வை பறிபோனது.!

Default Image

அமெரிக்காவில், முல்ட்னோமா கவுண்டி நீதி மையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது, லேசர் ஒளி கண்ணில் பட்டதில் 3 பெடரல் அதிகாரிகள் கண்பார்வையை இழந்தனர்.

அமெரிக்காவின் உள்ள போர்ட்லேண்ட் மாகாணத்தில் உள்ள முல்ட்னோமா கவுண்டி நீதி மையம் அருகே 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். கடந்த திங்களன்று இதனை தடுக்க பெடரல் அதிகாரிகள், முயன்றனர்.

 அப்போது, கலகக்காரர்கள் தாக்கியதில் ஒரு பெடரல் அதிகாரி பலத்த காயமுற்றார். ஒரு அதிகாரி துப்பாக்கி சூட்டில் இறந்துவிட்டர். மேலும், 3 அதிகாரிகளின் கண்களில் கலகக்காரர்கள் லேசர் வெளிச்சம் காட்டியதால், அவர்களின் கண்பார்வை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு திரும்ப பார்வை வராது என கூறப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

‘அமெரிக்க தெருக்களில் நடைபெறும் இந்த வன்முறை சம்பவங்களை ட்ரம்பின் அரசு அனுமதிக்காது. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.’ என டிரம்பின் பத்திரிகை செயலாளர் எச்சரித்தார்.

முல்ட்னோமா கவுண்டி நீதி மையம் அருகே ஏற்பட்ட கலவரத்தில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் ஏற்படுத்தப்பட்டன எனவும், பல்வேறு பகுதிகளில் தீ வைத்து எரித்து பொருட்கள் நாசம் செய்யப்பட்டன அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்