இந்திய கால் சென்டர் பணிகளுக்கு ஆபத்து?அமெரிக்கா கால்சென்டர்களுக்கு முன்னுரிமை?

வாடிக்கையாளர் சேவை மையங்கள் இயங்கும் இடத்தை அறிந்து கொள்ளும் உரிமையை உறுதி செய்யும் சட்ட மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றப்பட உள்ளது.

இதனால் இந்திய கால் சென்டர் பணிகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மசோதாவின்படி, கால்சென்டர் பணிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நிறுவனங்களின் பட்டியல் வெளிப்படையாக அறிவிக்கப்படும். உள்நாட்டிலேயே கால்சென்டர் அமைக்கும் நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் சேவை மையங்கள் எங்கிருந்து இயங்குகின்றன, என்பதை அறிந்து கொள்ளும் உரிமையும் இந்த மசோதாவின்  மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் விரும்பினால் அமெரிக்காவில் உள்ள சேவை மையத்திற்கு தமது அழைப்பை மாற்றுமாறு கோரலாம்.

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் உள்ளூர் சேவை மையத்தையே தொடர்பு கொள்ள விரும்புவார்கள் என்பதால், புதிய சட்டத்தால் இந்தயா உள்ளிட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அவுட் சோர்சிங் பணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment