வடகொரியாவில் முதல் கொரோனா.! எல்லையில் மட்டும் ஊரடங்கு.!?
சட்டவிரோதமாக வடகொரியாவிற்குள் நுழைந்துவிட்ட ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என வடகொரியா தெரிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இதுவரையில், வடகொரியாவை பாதிக்காமல் இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அறிந்தவுடன், அந்நாட்டு அரசு, நாட்டின் எல்லையை கடந்த 6 மாதங்கங்களுக்கு முன்பாகவே மூடிவிட்டது.
மேலும், எல்லை எல்லைகடந்து வந்தவர்களையும் தனிமைபடுத்தி இருக்க அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், வடகொரியாவில் தற்போது முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர், தென் கொரியாவிற்கு 3 வருடம் முன்பு சென்றவர், தற்போது அவர் சட்டவிரோதமாக வடகொரியாவிற்குள் நுழைந்துவிட்டார் என வடகொரியா அரசு தெரிவித்துள்ளது.
தற்போது வடகொரியாவில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்ட நிலையில், எல்லை பகுதியான கேசாங்கில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.