எளிமையான முறையில்.. டிடிவி தினகரனின் மகள் திருமண நிச்சயதார்த்தம்.!
எளிமையான முறையில் நடைபெற்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் திருமண நிச்சயதார்த்தம்.
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூர் காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி மகனுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு பாண்டிச்சேரியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் எளிய முறையில் திருமண நிச்சயதார்த்தம்நடைபெற்றது.
நிச்சயதார்த்தில் இருவீட்டாரின் குடும்பத்தினர் மட்டும் கலந்துகொண்டனர். அடுத்த 3 மாதங்களில் திருமண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.