திரிபுராவில் அடுத்த வாரம் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு.!
கொரோனா தொற்றுக்கு மத்தியில் திரிபுரா அரசாங்கம் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு.
கொரோனா நோயாளிகளைத் கண்டறிய வீடு வீடாக ஆய்வு செய்வதாக ஊரடங்கு ஜூலை 27 முதல் 30 வரை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிபுரா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மாநில செயற்குழுவின் தலைவர் முழு ஊரடங்கு திரிபுரா மாநிலத்தின் எல்லா பகுதியிலும் ஜூலை-27 திங்கள் அன்று மாலை 5 மணி முதல் ஜூலை 30 வியாழக்கிழமை காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்க்கு சிகிச்சையளிக்க பிளாஸ்மா சிகிச்சையையும் விரைவில் அளிக்கப்படவுள்ளது. திரிபுரா மாநிலத்தில் மொத்தம் 3675 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 2,125 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் . மொத்தம் 11 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.