இன்னும் இரண்டு நாட்களில் மிரட்டலாக வருகிறது “ரகிட ரகிட”- ஜகமே தந்திரம்.!

தனுஷின் ஜகமே தந்திரம் படத்திலிருந்து ரகிட ரகிட என்ற பாடல் இன்னும் இரண்டு தினங்களில் வெளியாகவுள்ளது.
நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ள திரைப்படம் “ஜகமே தந்திரம் “. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்த படத்தை Y NOT ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. மேலும் சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, வோக்ஸ்ஹால் ஜெர்மைன் மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்,. ஜோஜு ஜார்ஜ் மற்றும் கலையரசன் ஆகியோர் துணை வேடங்களிலும் நடிக்கின்றனர்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஸ்ரேயோஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்த நிலையில் நடிகர் தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ஜகமே தந்திரம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘ரகிட ரகிட’ பாடல் வெளியாகவுள்ளது. அதற்காக ரசிகர்கள் செம வெயிட்டிங்கில் உள்ளனர்.
3 Days to Go ! #Rakitaரகிடరకిట ????????????#JT #JagameThandhiram #JagameTantram @dhanushkraja @karthiksubbaraj @sash041075@Music_Santhosh @chakdyn @RelianceEnt @Shibasishsarkar @APIfilms@tridentartsoffl @GA2Official @UV_Creations @SonyMusicSouth @onlynikil @IamEluruSreenu pic.twitter.com/2l9CNG3evZ
— Y Not Studios (@StudiosYNot) July 25, 2020