தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு

Default Image

கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டது. ஆனாலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோன பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதன் பின் தமிழகத்தில்  ஜூலை மாதம் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என அரசு அறிவித்தது.

 இதனைதொடர்ந்து, தமிழக முழுவதும் எவ்வித தளர்வுமின்றி,  ஞாயிற்றுக்கிழமைகளில் (05.07.2020, 12.07.2020, 19.07.2020, 26.07.2020) முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என அறிக்கை வெளியிடப்பட்டது.இதனால் இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று அத்தியாவசிய தேவைகளான பால் கடை, மருந்தகங்கள் மட்டுமே இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகைக் கடைகள், உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் மூடி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony