மெட்ரோ ரயில்களில் 4G இணைய சேவையை அறிமுகம் செய்கிறது பிரான்ஸ்!
4G இணைய சேவையை பிரான்ஸ் தலைநகரில் 2019ஆம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து, கடந்த 2016ஆம் திட்டமிடப்பட்டு, 2017 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது என மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் மைக்கல் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த திட்டத்தில் காணப்பட்ட நடைமுறை சிக்கல்களினால், கடுமையான உழைப்பிற்கு பின்னர் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 2019-ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குள் 60க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களுக்கும் அதன் சுரங்க பாதைகளுக்குள்ளும் 4G இணைய சேவை வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, 2019ஆம் ஆண்டின் இறுதியில் 120 மொட்ரோ ரயில் நிலையங்களுக்கு மேற்படி சேவை விஸ்தரிக்கப்படவுள்ளதாக தகவல்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.