நெல்லையில் முதல்முறையாக 45 வயதான தன்னார்வலர் ஒருவர் பிளாஸ்மா தானம் செய்துள்ளார்!

Default Image

45 வயதான ஆண் ஒருவர் நெல்லை மாவட்டத்தில் முதல் முறையாக பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவி வருகிறது. பிளாஸ்மா சிகிச்சை நோயாளிகள் விரைவில் குணமடைய உதவுதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் . இந்நிலையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையைத் தொடர்ந்து திருச்சி, நெல்லை, மதுரையிலும் பிளாஸ்மா வங்கி தொடங்கவுள்ளது.

கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்த நோயாளியின் உடலில் இருக்கும் இரத்திலிருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளியின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிக்கும் முறை தான் பிளாஸ்மா சிகிச்சை.இதில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் 14 நாட்களுக்கு பிறகு பிளாஸ்மா தானம் செய்யலாம், தானம் பெறும் பிளாஸ்மாவை ஓராண்டு வரை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தோற்றலிருந்து
இதுவரை வரை 1909 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் நெல்லை மாவட்டம் மாவட்டத்தில் 45 வயதான ஆண் ஒருவர் நெல்லை மாவட்டத்தில் முதல் முறையாக பிளாஸ்மா தானம் செய்துள்ளார். இவர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 1 மாதத்திற்கு முன்னர் குணமடைந்தார் ஒரு மாதமாக அவருக்கு எவ்வித அறிகுறியும் இல்லாததால் உடல் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டு அவரிடம் இருந்து பிளாஸ்மா திறப்பின் மூலம் பெறப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்