Make In India திட்டத்தின் கீழ் சென்னையில் தொடங்கப்பட்ட Apple iPhone-11 உற்பத்தி.. விலை குறையுமா?

Default Image

மேக் இன் இந்தியா திட்டத்தின்படி, ஆப்பிள் நிறுவனம், தனது ஐ போன் 11 மாடலை சென்னையில் உள்ள தனது பாக்ஸ்கான் தொழிற்சாலையில் தாயாரிக்கவுள்ளது. 

இந்தியாவில் “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ், பல நிறுவங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதில் ஒரு பங்காக, உலகின் முன்னணி ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தனது குறிப்பிட்ட சில ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் தாயாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், ஃபாக்ஸ்கான் ஆலையை விரிவுபடுத்த 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ததாக தகவல் வெளியானது.

அதன்படி, தனது ஐ போன் 11 ரக மாடலை சென்னைக்கு அருகில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தொடங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில் அவர், மேக் இன் இந்தியா திட்டத்திற்கு இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன்கள் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்க ஊக்கம் கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

மேலும் அதில், ஆப்பிள் இந்தியாவில் ஐபோன் 11 ஐ தயாரிக்கத் தொடங்கியுள்ளது எனவும், இந்தியாவில் முதல் முறையாக ஒரு சிறந்த மாடலை ஆப்பிள் நிறுவனம் தயாரிக்க தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆப்பிள் நிறுவனம், தனது XR மாடலை இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு தயாரிக்க தொடங்கியது. பெங்களூர் ஆலையில் ஆப்பிள் ஐபோன் SE மாடலை கடந்த 2017-ம் ஆண்டில் தயாரித்து வருகிறது.  அதுமட்டுமின்றி, பெங்களூருக்கு அருகிலுள்ள தனது விஸ்ட்ரான் ஆலையில், ஐபோன் SE 2020 மாடலை இந்தியாவில் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்