Covid -19: வெண்டிலேட்டர் இல்லாததால் 34 வயது பானி பூரி விற்பனையாளர் உயிரிழப்பு!

Default Image

மத்திய பிரதேசம் புனேவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் வெண்டிலேட்டர் இல்லாததால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 34 வயது பாணி பூரி விற்பனையாளர் உயிரிழந்துள்ளார்.

கொரோனாவின் தாக்கம் பல வழிகளில் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. பலருக்கு மூச்சுத்திணறல் தான் அதிகளவில் ஏற்படுகிறது எனவே உலகின் பல மருத்துவமனைகளில் வெண்டிலேட்டர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்தியபிரதேசம் மாநிலத்திலுள்ள புனேவில் ஒரு மருத்துவமனையில் 34 வயது பானி பூரி விற்பனையாளர் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், புதன்கிழமை மாலை விஷ்ரந்த்வாடியில் உள்ள கஸ்தூர்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  பாணி பூரி விற்பனையாளர் வெண்டிலேட்டர் இல்லாமல் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இது குறித்து அங்குள்ள மேயர் முரளிதர் மோஹலிடம் குடும்பத்தினர் கொடுத்துள்ள புகாரின் பேரில் அலட்சியம் காட்டிய மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்